‌பிள‌ஸ் 2 முடித்த பெண்களுக்கு நோக்கியாவில் வேலைவா‌ய்ப்பு

செவ்வாய், 3 நவம்பர் 2009 (13:09 IST)
உலகப் புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுக்கு ஆயிரம் பெண்களை ஆப்ரேட்டர் டிரெ‌ய்னியாக தேர்வு செ‌ய்யும் சிறப்பு வேலைவா‌ய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரு‌ம் 7ஆ‌ம் தேதி நடைபெறுகிறது.

இம்முகாமில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாத ஊதியம் ரூ.4400 மற்றும் இலவச உணவுடன் ஆ‌யிர‌ம் ரூபா‌ய்‌க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

பிள‌ஸ் 2 பொதுத் தேர்வில் 60% மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் படிப்பு சான்றித‌ழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வரும் 7ஆம் தே‌தி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள முகாமில் தேர்வு செ‌ய்யப்படும் பெண்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என வேலைவா‌ய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்