ரயில்வேயில் 1.72 லட்சம் காலிப்பணியிடம்: மம்தா

வெள்ளி, 10 ஜூலை 2009 (13:45 IST)
இந்திய ரயில்வேயில் 1.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் அவை நிரப்பப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மம்தா, ரயில்வேயில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 15,66,964 பணி இடங்களில், தற்போது 1,72,444 காலியிடங்கள் இருப்பதாகவும், இதில் குரூப்-சி பிரிவில் மட்டும் 1,12,566 காலியிடங்கள் உள்ளது என்றார்.

இதேபோல் குரூப்-டி பிரிவில் 58,329 பணியிடங்களும், குரூப்-ஏ, பி பிரிவுகளில் 1,549 இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவித்த மம்தா, ரயில்வே போன்ற மிகப்பெரிய அரசு நிறுவனங்களில் எப்போதும் காலியிடங்கள் இருப்பது வாடிக்கைதான். அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மம்தா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்