இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு: ஜூலை 6 கடைசிநாள்

செவ்வாய், 16 ஜூன் 2009 (12:26 IST)
இந்தியன் எக்னாமிக் சர்வீஸ், இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் ஆகியவற்றில் கிரேட்-4 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரவேற்றுள்ளது.

வயது தகுதி: இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 1, 2009 அன்று 21 வயதிற்கு மேல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: இதில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் (Indian Economic Service-IES) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், எக்னாமிக்ஸ், அப்ளைட் எக்னாமிக்ஸ், பிசினஸ் எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் (Indian Statistical Service-ISS) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஸ்டாடிஸ்டிக்ஸ், மேத்தமெட்டிக்கல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அப்ளைட் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் அலுவலகங்கள், இதர தபால் அலுவலகங்களில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இத்தேர்வுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் ஆக அனுப்ப வேண்டும். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Secretary, Union Public Service commission, Dholpur house, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு ஜூலை 6ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். upsc.gov.in என்ற இணையதளத்திலும் இதுபற்றி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்