யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத இரண்டு வாய்ப்புகள் அதிகரிப்பு

செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (17:21 IST)
இந்திய குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம்.
FILE

இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், "2014-ம் ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவையெனில், அனைத்துப் பிரிவிலும் இத்தேர்வை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பிலும் தளர்வு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வயது வரம்பில் தளர்வு குறித்த குழப்பத்தை தீர்க்க, விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும்' என்று பணியாளர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கைப்படி, யுபிஎஸ்சி தேர்வை அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 4 முறையும் (30 வயதுவரை), ஓபிசி பிரிவினர் அதிகபட்சமாக 7 முறையும் (33 வயதுவரை) தேர்வு எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 35 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும்.

அரசின் புதிய அறிவிப்பு, பொது பிரிவினர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்