43 பேரு‌க்கு ப‌ணி‌‌நியமன ஆணை : மு.க. ‌ஸ்டா‌லி‌ன் வழ‌ங்‌கினா‌‌‌ர்

புதன், 17 டிசம்பர் 2008 (16:32 IST)
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையிலமருத்துவர்கள், பூச்சியியல் உதவியாளர்கள், பணிச் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களஎன 43 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை உள்ளாட்சித்துறஅமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தலைமை‌ச் செயலக‌த்‌தி‌‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 10 மருத்துவர்களுக்கு ரூ.8000-275 13500 என்ற ஊதிய அடிப்படையிலும், 10 செவிலியர்களுக்கு ரூ.5000-150-8000 என்ற ஊதிய அடிப்படையிலும், 13 மருந்தாளுநர்களுக்கு ரூ.4500-125-7000 என்ற ஊதிய அடிப்படையிலும்‌;

7 பலநோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.3200-85-4900 என்ற ஊதிய அடிப்படையிலும், 3 பூச்சியியல் உதவியாளர்களுக்கு ரூ.5900-200-9900 என்ற ஊதிய அடிப்படையிலும் என மொத்தம் 43 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் கடந்த கால ஆட்சியின் போது நிரப்பப்படாமல் காலியாக இருந்த 4,387 பணியிடங்கள், கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நிரப்பப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறையில் 55 மருத்துவர்கள், ஒரு சித்தா மருத்துவர், 2 உதவி கால்நடை மருத்துவர்கள், 28 செவிலியர்கள், 51 பலநோக்கு சுகாதாரப் பணியாளர்கள், 16 மருந்தாளுநர்கள், 3 பூச்சியியல் உதவியாளர்கள் ஆகியோர் வேலை வா‌ய்‌ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செ‌ய்யப்பட்டுள்ளனர்.

அதேபோ‌ல், கடந்த இரண்டரை ஆண்டுகளில் கண்காணிப்பு பொறியாளர், நகரப்
பொறியாளர், மண்டல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் என வகுப்பு-1ல் 28 நபர்களுக்கும், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவா‌ய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், கால்நடை மருத்துவ அலுவலர்கள் என வகுப்பு-2ல் 144 நபர்களுக்கும்;

இளநிலைப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பிரிவு மேலாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், வரி மதிப்பீட்டாளர்கள், துப்புரவு ஆ‌ய்வாள‌ர்க‌ள், சுகாதார ஆ‌ய்வாள‌ர்க‌ள், துப்புரவு மேஸ்திரிகள், உரிமம் ஆ‌ய்வாள‌ர்க‌ள், தட்டச்சர்கள் என பல்வேறு பிரிவுகளில் வகுப்பு-3ல் 710 நபர்களுக்கும், மயான காப்பாளர்கள் 169 நபர்களுக்கு வகுப்பு-4ல் பதவி உயர்வுகள் என 1051 நபர்களுக்கு
சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பணியாணை பெற்ற ஒவ்வொருவருக்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பணியில் கடமையுனர்வோடு செயல்பட கேட்டுக் கொண்டும், அமைச்சர் தனிப்பட்ட முறையில் தான் கையொப்பமிட்ட வா‌ழ்‌த்து‌க் கவிதையினை வழங்கினார் எ‌ன்று கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்