சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சைதாப்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 27 மற்றும் 29-ந் தேதியில் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்திற்குள் இடமாற விரும்பும் முதுநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 27-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கும், வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கான (அனைத்து வகை) கலந்தாய்வு 29-ந் தேதி காலை 10 மணிக்கும் நடத்தப்படும்.
சென்னை மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்விற்கு வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை கடிதத்துடனும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிì பரிந்துரை கடிதத்துடனும் வர வேண்டும்.
மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.