2011இல் ஊதிய உயர்வு, வேலை வாய்ப்பு: உலகளாவிய ஆய்வு கூறுகிறது

திங்கள், 11 ஜூலை 2011 (17:20 IST)
2011இல் உலக அளவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், வேலையில் உள்ளோருக்கு நல்ல ஊதிய உயர்வு கிட்டும் என்றுமமெர்சர் இண்டியா மாணிட்டர் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 84 விழுக்காடு நிறுவனங்கள் இந்த ஆண்டில் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், அதனால் அதிகப்படியான பணியாட்களை நியமனம் செய்யவுள்ளதாகவும், இந்த ஆண்டில் நிறுவனங்கள் அளிக்கும் ஊதிய உயர்வு சராசரியாக 12.7 விழுக்காடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ஊதிய உயர்வைப் பொறுத்தவரை வாகன தயாரிப்பு நிறுவனங்களில் 14%, நுகர்வோர் பொருள் தயாரிப்பு - விற்பனை நிறுவனங்களில் 13.8%, உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் 13.4%, த.தொ.நிறுவனங்களில் 11.8% என இருக்கும் என்று கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்