வேலைவா‌ய்‌ப்பு‌த்துறை இணையதள‌ம் புது‌ப்‌பி‌க்க‌ப்பட‌வி‌ல்லை

புதன், 4 மார்ச் 2009 (11:23 IST)
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் தற்போதைய பதிவுமூப்பு நிலையை அறிய முடியாமல் உ‌‌ள்ள‌ன‌ர் ப‌திவுதார‌ர்க‌ள்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) பட்டியலை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளம் (www.employment.tn.gov.in) செயல்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர் எ‌ளிதாக சேவைகள‌ை‌ப் பெறு‌ம் வகை‌யி‌ல் துவ‌‌க்க‌ப்ப‌ட்ட இ‌ந்த இணையதள‌ம், கட‌ந்த 3 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக ப‌திவு செ‌ய்ய‌ப்படாம‌ல் உ‌ள்ளது.

ப‌திவுதார‌ர்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை, ப‌திவுமூ‌ப்பு உ‌ட்பட அனை‌த்து‌ம் பழையதாக உ‌ள்ளதா‌ல் நட‌ப்பு ‌விவர‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ள இயலாம‌ல் உ‌ள்ளது.

இதேபோல், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தகவல்களும் 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, உடனடியாக அனைத்து தகவல்களையும் புதுப்பித்து தற்போதை புள்ளிவிவரங்களையும், பதிவுமூப்பு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று வேலை வா‌ய்‌ப்பு அலுவலக‌ங்க‌ளி‌ல் ப‌திவு செ‌ய்து வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் எதிர்பார்க்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்