பள்ளிக் கல்வி இணையதள‌ம் துவ‌க்க‌ம்

திங்கள், 2 மார்ச் 2009 (12:37 IST)
செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற ‌விழா‌வி‌ல் ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த் துறை‌க்கான இணையதள‌‌த்தை ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு துவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

இ‌ந்த பள்ளிக் கல்வி இணையதளத்திலேயே இனி, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இணையதளமான ட‌பி‌‌ள்யுட‌பி‌ள்யுட‌பி‌ள்யு.‌‌பிஏஎ‌ல்எ‌‌ல்ஐகேஏஎ‌ல்‌விஐ.இ‌ன் எ‌ன்ற இணையதள‌‌த்தை‌த் தொடங்கி வைத்து பே‌சிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு மின்னணு ஆளுகைச் செயல்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்த இந்த இணையதளம் பெரிதும் தூண்டுகோலாக அமையும்.

தகவல்கள், புள்ளி விவரங்களுடன், அலுவலக நிர்வாகத்துக்கும், பல்வேறு பிரிவு அலுவலகங்களை இணைப்பதற்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.

விளம்பர வருவாய் மூலம் பள்ளிக்கல்வி இணையதளம் தொடர்ந்து இயங்கும்
ஆசிரியர்களுக்குத் தேவையான படிவங்களை இந்த இணையதளம் மூலமாகப் பெறுவதற்கும், ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கும் வழிவகை செய்யப்படும்.

மேலும் 10-ம் வகுப்பு, பிளஸ் - 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த இணையதளத்திலும் தங்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்
தேர்வு எண்ணைப் பதிவு செய்தால் செல்போனில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இந்த இணையதள உதவியுடன் கண்டறியப் பட்டு நிரப்பப்படும். தற் போது சுமார் 7 ஆயிரம் ஆசி ரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. வரும் கல்வியாண்டில் இவை நிரப்பப்படும்.

கடந்த ஆண்டு வேலூரில் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் தீயில் எரிந்து சேதமடைந்த ச‌ம்பவ‌ங்க‌ள் போ‌ன்று எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் நிகழாத வண்ணம் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தற்போது 1:40 ஆக உள்ளது
இதை 1:30 என்ற விகிதத்துக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் தங்கம் தென்னரசு.

வெப்துனியாவைப் படிக்கவும்