திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு!

சனி, 4 அக்டோபர் 2008 (12:02 IST)
பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படாது; திட்டமிட்ட காலப்படி தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், நடப்புக் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை அரசு தேர்வுகள் துறை மறுத்துள்ளது.

இதுகுறித்து அரசு பொதுத் தேர்வுகள் இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், இத்தகவலை கேட்டு மாணவர்களோ, பெற்றோர்களோ குழப்பம் அடையத் தேவையில்லை. பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் அரசுக்கு இதுவரை இல்லை என்றார்.

ஒருவேளை நாடாளுமன்றத் தேர்வுகள் குறுக்கிட்டால் அப்போது தேர்வுகள் நடத்துவது பற்றி ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்