ஜூலை 6, 7இல் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு
வியாழன், 4 ஜூன் 2009 (12:10 IST)
மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியுள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 6, 7ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து 2வது கட்ட கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.