குறும்பட பயிற்சிப் பட்டறை

வியாழன், 7 மே 2009 (12:06 IST)
நிழல் மற்றும் பதியம் திரைப்பட இயக்கங்கள் இணைந்து நட‌த்தும் 12வது குறும்பட பயிற்சிப் பட்டறை மே 24 முதல் 29ஆம் தேதி வரை நாகர்கோயிலில் நடக்கிறது.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்களும் இளைஞர்களும் பெற வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.

உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்குக் கட்டணம் உண்டு.

இதில் கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகின்றன.

திரைப்படத் துறையின் முன்னணி இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறார்கள்.

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோர் நிழல் - பதியம் அமைப்பு, 31-48, ராணி அண்ணா நகர், சென்னை -78 என்ற முகவரியிலும் 94444-84868 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்

வெப்துனியாவைப் படிக்கவும்