ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் 10,035 பேர் தேர்ச்சி

செவ்வாய், 26 மே 2009 (12:24 IST)
ஏப்ரல் மாத‌ம் 12ந்தேதி நடைபெற்ற ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரிதாபாத் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

மும்பை மாணவி சுபம் துளசியானி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

ஏ‌ப்ர‌ல் மாத‌ம் நடைபெ‌ற்ற நுழைவு‌த் தே‌ர்வை 3,84, 977 பேர் எழுதினர். இதில் 10,035 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 15 ஐ.ஐ.டிகள், புவனேஸ்வரம் ஐ.டி, தான்பாத்திலுள்ள ஐ.எஸ்.எம் ஆகியவற்றில் படிப்பதற்கு இடம் கிடைக்கும்.

மேற்கண்ட கல்வி நிலையங்களில் மட்டுமல்லாது இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய கடல்சார் கல்வி நிறுவனம் ஆகிய நிறுவனங்களிலும் படிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐ.ஐ.டியில் 8,295 இடங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதால் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என குவாஹா‌த்‌தி ஐ.ஐ.டி இயக்குநரான பேராசிரியர்.கெளதம் பரூவா தெரிவித்துள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 9 முதல் 16 வரை கல‌ந்தா‌ய்வு நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்