மருந்தாளுநர் பணிக்கு ஆள் தேர்வு

வெள்ளி, 26 டிசம்பர் 2008 (15:48 IST)
தேனியில் மருந்தாளுநர் பணிக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான பதிவுமூப்பை தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 31ஆ‌ம் தேதி சரிபார்க்கலாம் எ‌ன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ரத்னவேல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேனி மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனரால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்தாளுநர் பணியிடத்திற்கு தகுதியான பதிவுதாரர்களை பரிந்துரைக்க உத்தேச பதிவு மூப்பு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மருந்தாளுநர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2008 அன்று தகுதி ஏற்பு நாளாக கொண்டு குறைந்த பட்சம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பினரில் 40 வயதிற்கு உட்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 37 வயதிற்குள்ளும், பகிரங்க போட்டியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பகிரங்க போட்டியினர் பொதுப்பிரிவினரில் ஆதரவற்ற விதவை, கலப்பு மணம் புரிந்தோரில் 3.12.2008 வரையில் பதிவு செய்தவர்களும், முன்னாள் ராணுவத்தினர், ராணுவத்தில் பணிபுரிபவரை சேர்ந்தவர்கள், முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்தோர், தமிழ்நாடு மொழிப்போர் தியாகிகளின் சட்டப்படியான வாரிசு, சுதந்திர போராட்ட தியாகிகளின் சட்டப்படியான வாரிசு ஆகியோரில் 3.11.1997 வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

பகிரங்க போட்டியினரில் உடல் ஊனமுற்றோரில் 4.11.1999 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட பதிவுமூப்புக்குள் பதிவு செய்தவர்கள் வருகிற 31ஆ‌ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பரிந்துரையினை உறுதி செய்து கொள்ளலாம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்