ஆசிரியர்களுக்கு அடிக்க உரிமை இல்லை

மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெ‌ரி‌வி‌த்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில் 10வது படித்த அரவிந்த் யோகி என்ற மாணவன், தன்னை வகுப்பு ஆசிரியர் கண்ணத்தில் அறைந்ததால் அவமானம் அடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டான்.

இது குறித்து அந்த ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் ஆசிரியருக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு, பாடம் கற்பிக்கும்போது மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடவும் மறுத்துவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்