புதுச்சேரியில் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரசிடம் தோல்வி

வீரமணி பன்னீர்செல்வம்

வெள்ளி, 16 மே 2014 (17:05 IST)
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை விட 60 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி தோல்வியடைந்தார்.
 
புதுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 4 பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மாலை 4.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாராயணசாமி 1,94,972 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
 
இதையடுத்து நாராயணசாமி 60 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 3வது இடத்தை அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் பிடித்தார். இவர். 1,32657 வாக்குகள் பெற்றார். இதில் காங்கிரஸ், அதிமுக தவிர தேர்தலில் போட்டியிட்ட இதர 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
 
4வது இடத்தை திமுக வேட்பாளர் நாஜிமும், 5வது இடத்தை பாமக வேட்பாளர் அனந்தராமனும் பிடித்தனர். ஆறாவது இடத்தை நோட்டா பிடித்தது.
 
புதுச்சேரி தொகுதியில் 22,268 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியிருந்தது.

LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm
 
LIVE Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm

வெப்துனியாவைப் படிக்கவும்