பிரதமர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி

சனி, 22 பிப்ரவரி 2014 (17:58 IST)
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
FILE

ராஞ்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மேலும், தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசின் வழக்கம் அல்ல.
FILE

இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், நான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன்.

காங்கிரசில் ‘மேலிட கலாச்சாரம்’ நிலவுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவரிடமே நான் ஒப்படைத்து வருகிறேன் எனத் தெரிவத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்