நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால்

திங்கள், 20 ஜனவரி 2014 (14:32 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவும் எனவும்,காங்கிரஸ் கட்சி களத்திலேயே இல்லை எனவும் பேட்டி அளித்துள்ளார்.
FILE

கட்சி மேலிடம் தனக்கு எந்த பொறுப்பு அளித்தாலும் அதனை ஏற்க தயாரென காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கும் வேளையில் விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது, காங்கிரஸ் களத்திலேயே இல்லை என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பக்கம் பா.ஜ.க. அணியில் எடியுரப்பா போன்ற ஊழல் குற்றச்சாட்டு நபர்கள் உள்ளனர்.
FILE

ஆனால் மற்றொரு பக்கத்தில் நேர்மையான அரசியலை நடத்தும் ஆம் ஆத்மி உள்ளது. ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க.க் கும் இடையே ஏற்பட்டுள்ள இத்தகைய போட்டி காரணமாக காங்கிரஸ் களத்திலேயே இல்லை. எனவே நாடு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டுக்கு நல்ல, நேர்மையான, உறுதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.




வெப்துனியாவைப் படிக்கவும்