காங்கிரஸ் அரசுக்கு விடை கொடுங்கள்: மோடி ஆவேசப் பேச்சு

சனி, 22 பிப்ரவரி 2014 (17:59 IST)
நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு விடை கொடுங்கள் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

வண்டலூர் பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
FILE

பொதுவாக மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது ராணுவத்தில் மதவாத சிந்தனை இருந்தது இல்லை. ஆனால் ராணுவத்தில் எவ்வளவு இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என இந்த அரசு கணக்கு போட ஆரம்பித்தது. இதன் மூலம் மதவாத சிந்தனையை ராணுவத்திலும் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதாவது, இந்த அரசின் சிந்தனை, செயல்படும் முறை பெரிய பிரச்னையில் நாட்டைத் தள்ளிவிடும் நிலையில் உள்ளது. இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசு உடனடியாக விடை கொடுங்கள்.

ஊழலில் கூட்டாட்சி: ஊழல் செய்வதில் மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் கூட்டாட்சி முறையை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு கடைப்பிடிக்கிறது. நமது நாட்டில் கூட்டாட்சி முறையே இருந்து வந்தது. ஆனால், காங்கிரஸ் அரசு மாநில அரசுகளை மதிக்காததோடு மோதல் போக்கினை கடைப்பிடிக்கிறது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், மாநில அரசுகளுடன் தோளோடு தோள் நின்று மாநில அரசுகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு மாநில அரசுகளை அரவணைத்து கூட்டாட்சி முறையைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, ஊழல் செய்வதில் மாநிலத்தில்
FILE

உள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டாட்சி முறையைக் கடைப்பிடிக்கிறது. தமிழகத்தில் அதுபோன்று நிறைய பேர் உள்ளனர். அவர்கள் யார் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு (கூட்டத்தினருக்கு) தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்