MBBS படிப்பில் சேர 15,000 பேர் ஆர்வம்: விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூன் 17

திங்கள், 15 ஜூன் 2009 (16:42 IST)
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 15,000க்கும் மேற்பட்மாணவர்கள் விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.

இதுவரை 10,000 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சென்னகீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் வரும் 17ஆம் தேதி கடைசி நாளாகும்.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, சேலமஉட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களமட்டுமே உள்ளன.

பிளஸ் 2 தேர்வில் மருத்துவத்துக்கு உரிய சமமான ஒட்டுமொத்கூட்டு மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் (ரேண்டமஎண்) வழங்கப்படும். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சென்னையிலவரும் 19ஆம் தேதி சம வாய்ப்பு எண் அளிக்கப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனரஅலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. ரேங்க் பட்டியலசுகாதாரத் துறையின் tnhealth.org இணைய தளத்திலும் அன்றைய தினம் வெளியிடப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் ரேங்க் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளதா அல்லதமருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளதா என்பதை 3 நாள் இடைவெளியில் மாணவர்களஉறுதி செய்து கொள்ள முடியும்.

பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 10ஆமதேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்