JEE நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

புதன், 23 செப்டம்பர் 2009 (18:23 IST)
நாட்டில் உள்ள 15 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு (JEE தேர்வு) அடுத்தாண்டு ஏப்ரல் 11ஆம் தேதி நடத்தப்படும் என இளநிலை மாணவர் சேர்க்கைக்கான குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இளநிலை மாணவர் சேர்க்கைக்கான குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேதியியல், கணிதம் மற்றும் பௌதீகம் ஆகிய பாடங்களில் அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் அடங்கிய 2 கேள்வித் தாள்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான பாடங்கள் ஐ.ஐ.டி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்-லைன் அல்லது நேரில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்