ECG, EMG பயிற்சி, மருத்துவம் சார்ந்த படிப்புக்கு நாளை விண்ணப்பம்

செவ்வாய், 30 ஜூன் 2009 (15:23 IST)
ECG, EMG பயிற்சிகள் உட்பட மருத்துவம் சார்ந்த படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் வினியோகிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் 15, கிங் நோய் தடுப்பு நிலையம் ஆகியவற்றில் மருத்துவம் சார்ந்த ஒரு ஆண்டு சான்றிதழ் பயிற்சிகளுக்கு 1,450 இடங்கள் உள்ளன. பட்டய படிப்புகளுக்கு 135 இடங்கள் உள்ளன.

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பயிற்சி (ஓராண்டு) மற்றும் ரீஹேபிளிடேஷன் தெரபி பட்டய பயிற்சி (2 ஆண்டு) ஆகியவற்றில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக நுட்பநர் (டி.எம்.எல்.டி), ரேடியோலாஜிகல் டெக்னாலஜி (2 ஆண்டு) மற்றும் ஈ.சி.ஜி, ஈ.ஈ.ஜி, ஈ.எம்.ஜி (ஓராண்டு பயிற்சி) ஆகியவற்றில் சேர பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் 10ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகலும் வினியோகிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்