200 அரசு பள்ளிகள் தரம் உயர்வு: ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்

புதன், 24 ஜூன் 2009 (16:33 IST)
தமிழகம் முழுவதும் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருப்பதால், புதிதாக ஆயிரம் பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம் ஒரு பள்ளிக்கு 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியர் என மொத்தம் 300 காலியிடங்களும், இதேபோல், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயரும் போது 6 பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) பணி இடங்களும் உருவாகும்.

இதனால் புதிதாக சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றுமமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்