மத்திய கடல்சார் பல்கலை‌யி‌ல் 18 க‌ல்‌விக‌ள்

திங்கள், 7 ஜூலை 2008 (11:27 IST)
சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் கப்பல் நிர்வாகம், மரைன் என்ஜினீயரிங், துறைமுக நிர்வாகம், கப்பல் கட்டுதல் உள்பட 18 வகையான படிப்புகள் துவ‌ங்க‌ப்பட உ‌ள்ளன.

மத்திய அரசு, சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் மத்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.

சென்னையில் தொடங்கப்பட இரு‌க்கு‌ம் பல்கலைக்கழகம் இ‌ந்த கடல்சார் பல்கலைக்கழகம்தா‌ன் இந்தியாவி‌ல் அமைக்கப்படும் முதல் கடல்சார் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை அடு‌த்து கொ‌ல்க‌ட்டா, வைசாக், கொச்சி, மும்பை ஆகிய இடங்களிலும் கடல்சார் பல்கலைக்கழகங்களை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் துவ‌ங்க இரு‌க்கு‌ம் ம‌த்‌திய கட‌‌ல்சா‌ர் ப‌ல்கலை‌க்கழக‌்‌தி‌ல், எம்.எஸ்சி. நாட்டிக்கல் டெக்னாலஜி, எம்.டெக். மரைன் என்ஜினீயரிங், எம்.எஸ்சி. மேரிடைம் சேப்டி அட்மினிஸ்டிரேசன், எம்.எஸ்சி., மரைன் எ×கேஷன், எம்.எஸ்சி. போர்ட் மேனேஜ்மென்ட், எம்.இ. மரைன் ஸ்ட்ரக்சர் மற்றும் போர்ட் டிசைன், எம்.இ., போர்ட் எகïப்மென்ட் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம், பி.எஸ்சி. போர்ட் மேனேஜ்மென்ட், பி.எஸ்சி. போர்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி. போர்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட், பி.எஸ்சி. ஷிப்பிங் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி. ஷிப்பிங் மேனேஜ்மென்ட், பி.ஜி. டிப்ளமோ இன் மேரிடைம் லா, பி.ஜி. டிப்ளமோ இனë மேரிடைம் பிசினஸ் லா, பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர், எம்.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் என 18 க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ஆர‌ம்‌பி‌க்க உ‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்