நுழைவுத்தேர்வுக்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்

வியாழன், 2 ஏப்ரல் 2009 (12:15 IST)
அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌‌‌ம் நட‌த்து‌ம் எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் டான்செட் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் 30-ந் தேதியும், மற்ற படிப்புகளுக்கான நுழைவு‌த் தேர்வு 31-ந் தேதியும் நடைபெற உள்ன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு கட்டணம் ரூ.150 மட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் ஒவ்வொரு படிப்புக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துவ‌ங்‌கியது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுப்பவர்களுக்கு உடனடியாக அவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அங்கேயே நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

நேரில் வராதவர்கள் விண்ணப்பத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏப்ரல் மாதம் 25-க்குள் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு தபால் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்