கோடை விடுமுறையை பயனுள்ள வழியில் கழிக்க பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்வித் திட்டம்

வியாழன், 1 ஏப்ரல் 2010 (14:24 IST)
FILE
பிரிட்டிஷ் கவுன்சிலின் சென்னைக் கல்வி மையம் 8 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கான சிறப்பு கோடைகால ஆங்கிலக் கல்வித் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில் தன்னம்பிக்கை மற்றும் மொழி வழி தொடர்புப் படுத்தலில் திறன் வளர்ப்பு ஆகியவற்றில் சிறப்புப் வகுப்பறைப் பயிற்சிகளை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது.

சிறுவ‌ர்களுக்கான கல்வித் திட்டம்: மே மாதம் 3ஆம் தேதி முதல் துவங்கும் ‌சிறுவ‌ர்களுக்கான 3 வார கல்விப் பாடத் திட்டத்தில் வானிலை மாற்றம், அழிந்து வரும் உயிரினங்கள், கழிவு மறுசுழற்சி மற்றும் வன உயிரிகள் பற்றியக் கல்வித் திட்டமாக இது அமையவுள்ளது.

வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை 2 மணி நேர‌ம் நடைபெறும். இந்தக் கல்வித் திட்டத்தின் முடிவில் பெற்றோர்கள் முன்னிலையில், ‌கற்றுக் கொண்ட விஷயங்களை ‌பி‌ள்ளைக‌ள் எடுத்துக் காட்டும். இதற்கான கட்டணங்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுளது. இதில் படிப்பிற்கான புத்தகங்கள், தேர்வு ஆகியவற்றிற்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.

16 வயதுக்கு மேற்பட்டோருக்கான பாடத் திட்டம்: இந்த வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை 14 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2 ம‌ி நேரம் நடைபெறும்.

இந்திய மாணவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்தக் கல்வித் திட்டம் வருமாறு:

இங்கிலிஷ் எவல்யூஷன் : ஆங்கில மொழியில் நிபுணத்துவம் அடைவதற்கான இலக்கணம், சிறப்பு சொற்பொருள் பயிற்சிகள் இதில் அடங்கும்.

இங்கிலிஷ் எக்சிகியூட்டிவ் : இது பணியிடத்தில் மொழி வல்லமையை வளர்த்துக் கொள்ள உதவும்.

இங்கிலிஷ் இம்பேக்ட்: ஆங்கில மொழியில் சரளத்தை வளர்த்துக் கொள்ளவும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட நேர்காணல்களில் தொடர்பு படுத்தும் திறன், மற்றும் தன்னம்பிக்கை, குழு விவாதம் மற்றும் பொது இடங்களில் உரையாற்றுவதற்கான திறன் இதில் கற்றுக் கொடுக்கப்படும்.

இதற்கு சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலக உறுப்பினர் அனுமதியும் உண்டு.

அனைத்துத் தரப்பு மாணவர்களும் லெவல் டெஸ்ட் ஒன்றில் பங்கேற்பது அவசியம். இதன் பிறகுதான் பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெறும். மே மாதம் 2ஆம் தேதி பதிவிற்கான கடைசி தினமாகும். மே 3ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் மற்ற ரெகுலர் பாடத்திட்டத்திற்கான பதிவுகளையும் செய்து கொள்ளலாம்.

இலவச லெவல் டெஸ்ட் மற்றும் பிற விவரங்களுக்கு 044 4205 0600 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் அனைத்துக் கல்வித் திட்டங்களுக்கான விவரங்களை பிரிட்டிஷ்கவுன்சில்.ஆர்க் இணையதளத்தில் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்