குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டத்தால் 5 லட்சம் குழந்தைகளுக்கு கல்வியறிவு

புதன், 15 ஜூலை 2009 (16:58 IST)
அரசின் குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு திட்டத்தால், நாடு முழுவதும் 5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் பள்ளிக் கல்விக்கு திரும்பியுள்ளதாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஹரிஷ் ராவத், நாட்டின் 271 மாவட்டங்களில் அமலில் உள்ள குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டங்கள் மூலம் 5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் பள்ளிக் கல்விக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் 5.21 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அபாயகரமான பணிகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசின் சிறப்புப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுவதுடன், தொழிற்பயிற்சி, ஊட்டச் சத்துள்ள உணவுகள், உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படுவதாக ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்