இந்தியா, சீனாவுடன் போட்டியிடும் விதத்தில் கல்வித்திட்டத்தை மாற்றுவோம்: ஒபாமா

புதன், 15 ஜூலை 2009 (13:41 IST)
இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் போட்டியிடும் விதத்தில் அமெரிக்காவின் கல்வித் திட்டத்தை மாற்றும் நடவடிக்கையை தமது அரசு மேற்கொள்ள உள்ளதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வாரென் மிச்சிகன் பகுதியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த ஒபாமா, அமெரிக்காவின் 21ஆம் நூற்றாண்டு கல்வியை மேம்படுத்த ஏற்கனவே சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் இந்தியா, சீனா மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் அமெரிக்காவின் கல்வித் திட்டம் முன்னேற்றமடையும் என்றார்.

தனது அரசு பதவியேற்ற போதே வருங்காலத்தில் அமெரிக்கா எப்படி இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டதாகவும், வரும் 2020இல் கல்லூரிப் படிப்பை முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமாக இருக்கும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்