புதிதாக 7 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

நாடு முழுவதும் 7 இடங்களில் புதிதாக ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் திருச்சியிலும், ஜார்க்கண்டில் ராஞ்சியிலும், சட்டீஸ்கரில் ராய்ப்பூரிலும், ஹரியானாவில் ரோஹ்தக் நகரிலும் தலா ஒரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இவை 2010-11ஆம் கல்வியாண்டில் செயல்படத் துவங்கும்.

இதையடுத்து ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிறுவப்படும் தலா ஒரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் வரும் 2011-12ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை துவக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்