பயோ-டெக்னாலஜி கருத்தரங்கம்: அண்ணா பல்கலை, பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்துகிறது

புதன், 26 ஆகஸ்ட் 2009 (13:18 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோ-டெக்னாலஜி மையத்துடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) குறித்த கருத்தரங்கை வரும் செப்டம்பர் 11, 12ஆம் தேதிகளில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெறும் இந்த 2 நாள் கருத்தரங்கில் (Biotechnology: UK and Indian Perspectives) இங்கிலாந்தில் உள்ள அபெர்டே டுன்டீ பல்கலை, எக்சீடெர் பல்கலை, லெய்செஸ்டர் பல்கலை, நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஹெல்த்கேர் பயோ-டெக்னாலஜி, பயோ-ப்ராசஸ் டெக்னாலஜி, பிளான்ட் பயோ-டெக்னாலஜி, ரிகாம்பினன்ட் டி.என்.ஏ. டெக்னாலஜி, கம்ப்யூடேஷனல் பயோலஜி அண்டு ஜெனிடிக்ஸ் ஆகிய பிரிவுகளில் விஞ்ஞானிகள் உரையாற்ற உள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவுக் கட்டணம் மற்றும் இதர தகவல்களை அறிய 044-42050600 (பிரிட்டிஷ் கவுன்சில்) அல்லது 044-22350772, 22203566 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்