சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செல்போனுக்கு தடை

திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (13:25 IST)
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஜூலை 29ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில், செல்போன்கள் கவனத்தை திசை திருப்பக் கூடிய உபகரணங்களாகவும், அதே சமயம் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதனை பள்ளி வளாகத்திற்குள் தடை செய்திட வேண்டும்.

குறிப்பாக, கேமராவுடன் இணைந்த செல்போன்களால் கடந்த காலத்தில் ஏராளமான தவறுகள் நடந்துள்ளது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவரக் கூடாது என சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் உத்தரவிட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், உத்தரவை மீறி பள்ளிகளுக்குள் செல்போன் பயன்படுத்தும் அல்லது எடுத்து வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை என்பது பற்றி அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்