இந்தியன் வங்கியில் Probationary Officer பணிவாய்ப்பு

வியாழன், 29 அக்டோபர் 2009 (15:55 IST)
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கியில் 118 Probationary Officer பணியிடங்கள் நிரப்புவதற்காக தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Probationary Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2009 அன்று 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியக் கூடிய அடிப்படைத் திறமை பெற்றிருக்க வேண்டும். வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு ரூ.400 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை இந்தியன் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். இதற்காக இந்தியன் வங்கி இணையதளத்தில் சலான் உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வங்கியில் பணம் செலுத்தும் போது கொடுக்க வேண்டும். இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய indianbank.inஇணையதளத்தைப் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்