ஆன்லைனில் CAT தேர்வு: கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு?

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (15:37 IST)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை (CAT) எழுதுவதில் கிராமப்புற மாணவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை படிப்பு வழங்கும் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக CAT தேர்வு எழுத வேண்டும்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள CAT தேர்வை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஆன்-லைனில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மாணவர்களும் எளிதாக இத்தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கணினி தொழில்நுட்பங்களைப் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் CAT தேர்வு ஒரு தடுப்புச் சுவராகவே இருக்கும் என டைம் பயிற்சி மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்