அடுத்த கல்வியாண்டில் 50 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை

வெள்ளி, 23 அக்டோபர் 2009 (15:53 IST)
அடுத்த கல்வியாண்டில் (2010-11) சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 50 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலையில் நேற்றிரவு நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் சல்மான் குர்ஷீத், கடந்த நிதியாண்டில் 6 லட்சம் சிறுபான்மையின மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித் தொகை பெற்றதாகவும், நடப்பு நிதியாண்டில் இது 29 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

அடுத்த கல்வியாண்டில் சுமார் 50 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்