தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன...?

தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மன உளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது நல்லது.
அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல்  பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். 
 
சத்துக் குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு  வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல்  பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். 
 
எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை  உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். 
 
வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற  பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல  பிரச்னைகள் உண்டாகிறது. 
 
உணவில் ரவை, சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி  உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு  சேர்த்துக் கொள்ளலாம். 
 
வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்