நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்கள் புரத உணவுகளை தவிர்க்கவேண்டும். புரத பொருட்கள் உடலில் இரத்தத்தில் அதிகரிப்பதால் உடலில் பசியின்மை மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுகிறது. அதிக புரத பொருட்களாவன இறைச்சி. தயிர், பால், வெண்ணை, முட்டை போன்றவைகளையும் தவிர்ப்பதும் நல்லது.
அடுத்து தவிர்க்க வேண்டிய ஒன்று பாஸ்பேட். பொதுவாக கால்சியமும் பாஸ்பேட்டும் இணைந்து உடல் எலும்புகளை வலுவாக்குகிறது. அதிக கால்சியமும் பாஸ்பேட்டும் உடலில் சேருவதால் இதயம், சிறுநீரகம், இரத்த குழாய்கள் மற்றும் மெல்லிய திசுக்கள் பாதிப்படைகிறது. அதிக பாஸ்பேட் அளவு உங்கள் எலும்புகளை வலுவிழக்க செய்கிறது.
பொதுவாக அதிக பொட்டாசியம் காணப்படும் உணவுகள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்குகள். இவை இரத்தத்தில் அதிக அளவு கலப்பதால் உங்கள் இதயத்தை பாதிக்கிறது. நீர்ம உணவுகளை உங்கள் உடலின் நிலைக்கேற்ப டாக்டரின் பரிந்துரைக்கும் அளவின் படியே எடுப்பது சிறந்தது.