ரெட்டினோபிளாஸ்டோமா – கண் புற்றுநோய்

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010 (14:00 IST)
குழந்தைகளின் கண் பார்வையை பறிக்கும் மிக அபாகரமான ஒரு நோய்தான் ரெட்டினோபிளாஸ்டோமா என்பது.
வருடத்திற்கு 80 முதல் 100 குழந்தைகள் வரை இந்த வகை புற்று நோய் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்று கூறுகிறது பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா.

இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட கண்ணை அகற்றிவிடுவதே முன்பெல்லாம் கடைபிடிக்கப்பட்ட ஒரே சிகிச்சை முறையாக இருந்தது. இப்போது வந்துள்ள சில நவீன தொழில்நுட்பங்கள் துணைகொண்டு சிகிச்சை செய்தே கண்ணை காப்பாற்றிவிடும் வாய்ப்பை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளன என்று கூறுகிறார் இம்மருத்துவமனையில் மருத்துவர் விக்காஸ் கேத்தன்.

டிரான்ஸ்பூப்புல்லரி தெர்மோ தெரபி, கிரையோ தெரபி, லேசர் ஃபோட்டோகாகுலேஷன், பிரான்கி தெராபி ஆகியன அப்படிப்பட்ட சில நவீன சிகிச்சைகளாகும்.

வயதானவர்களுக்கு கொராய்டல் மெலனோமா எனும் புற்றுநோய் கண்களில் ஏற்படுகிறது. இதனை தெர்மோ தெரபி, பிரான்கி தெரபி ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

கண்களின் பார்வை மங்கினாலோ அல்லது வெளியல் தெரியாத பாதிப்பு எதையாவது உணர்ந்தாலோ உடனடியாக நல்ல மருத்துவமனையை அணுகினால், உரிய சிகிச்சை பெற்று கண் பார்வையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்