துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு

-ஷைலஜ

"இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லுங்க? ஏன்னா Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கணும்" என்று விடுமுறைக்கு வந்த எங்கள் குடும்ப நண்பரின் மகன் கடையில் இப்படி சொன்னான்

போன மாதம் அவன் காய்ச்சலில் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸபொருள் வாங்குமுன் அதை கவனிக்க வேண்டும் என்பது..

Zero Added Hydrogenated என்பது செயற்கையாக செய்யப்படும். இது பசு, எருது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப் படுகிறது!

இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து.

இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது
என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பான இது இருதய நோய் (coronary heart disease, Cancer, Diabetes) மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை.

நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸபாக்கெட்டில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸவகைகள் , பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது.

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?

இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும் தயாரித்த உணவில் மணம் மாறாது!

18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!

இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ், மெக்டொனால்ட், மேரி ப்ரௌன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!

பல முன்னேறிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த எண்ணெயில் தயாரித்த உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக்டோனால்ட் போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடி வருகின்றன! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, இது இங்கில்லை அமெரிக்காவிலே!

இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட் போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட் சிப்ஸ், ஃப்ரென்ச் ஃப்ரைஸஎன எதை வாங்குவதாக இருந்தாலும் அதில் இந்த எண்ணெயில் செய்யப்படவில்லை என்று இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து விட்டு பொருட்களை வாங்குங்கள்!!!

உபரி தகவல்:

உங்கள் வீட்டில் பூரி மற்றும் செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற கொழுப்பு நிறைந்து விடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்