இந்தியாவில் 20 இலட்சம் பேருக்கு காசநோய்!

வெள்ளி, 4 மார்ச் 2011 (16:42 IST)
நமது நாட்டில் மார் சளியால் உருவாகி வாழ்க்கையைக் குடிக்கும் காச நோயால் 19,76,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் தினேஷ் திரிவேதி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

பொதுவான காச நோயால் பாதிக்கப்பட்ட இந்த 20 இலட்சம் பேரைத் தவிர, எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கடும் காசநோய்க்கு (Multi-drug resistant tuberculosis - MDR-TB) மேலும் 98,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

காச நோய்க்கு சிகிச்சையளிக்க தேச காச நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 13,000 கண்டுபிடிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டுவரும் பல்வேறுத் திட்டங்களில் இதுவே மிக வேகமானத் திட்டம் என்று அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்