திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இல்யல்பாகவே அமந்துவிட்டது.
நரகாசுரன் இறக்கும் தருவாயில் தன் தாயிடம், நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். அதற்காக இந்நாளை அனைவரும் இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். ஆகவே நரகாசுரன் மறைந்த இந்த நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.