மாண்புமிகு அமைச்சர் தங்கையா அவர்களே
நீங்கள் அடிமைகள் அல்ல. அம்மாவின் அடிமைகள் என உங்களை மார்தட்ட உகந்த இடம் சட்டமன்றம் அல்ல. அதற்கு உங்களின் கட்சியின் செயற்குழு, பொதுகுழு இருக்கிறது. அங்கு சென்று சொல்லுங்கள் நாங்கள் அம்மாவின் அடிமைகள் என்று. நீங்கள் வளைந்து, குனிந்து, காலில் விழுந்து, ஓட்டுகேட்ட சாமானியன் சொல்லுகிறேன். நீங்கள் மட்டும் அல்ல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர், எதிர்க்கட்சிதலைவர் உட்பட அனைவரும் சாமானியர்களின் அடிமைகள் அல்ல, சேவகர்கள்.