பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் மாணவிகள்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (16:02 IST)
கரூரில் மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.




கரூர் அருகே உள்ள கோடங்கிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஸ்ரீமத் சுவாமி சாரதானந்தா அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைத்துறையின் பின்னணிப் பாடகர் செந்தில் தாஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு சுவாமிஜி அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றிய போது கூறுகையில், தெய்வங்களின் மறு உருவமாக விளக்கம் பெற்றோருக்கு பாதபூஜை செய்ய வேண்டும் என்பது மிக சிறப்பான செயல் என்றும், பிற்காலத்தில் பெற்றோர்களே பாதுகாப்பது மாணவர்களின் கடமை என வலியுறுத்தி பேசினார் சிறப்பு விருந்தினர் செந்தில் தாஸ், மாணவிகளை உற்சாகமூட்டும் வகையில் இன்னிசை பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். கல்லூரி செயலாளர் முதல்வர் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 
சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்