ஜெ. மரணம்; ஓபிஎஸ் உண்ணாவிரதம்: ஸ்டாலின் வரவேற்பு!

புதன், 1 மார்ச் 2017 (09:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அதனுடன் எதிர்க்கட்சியான திமுகவும் இதே கருத்தை கூறி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


 
 
வருகிற 8-ஆம் தேதி ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக காவல்துறை அனுமதி வேண்டியும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஓபிஎஸின் இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார். அதில், ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது அந்த எண்ணம் வரவில்லை. அதேபோல காபந்து முதல்வராக இருந்தபோதும் அந்த எண்ணம் வரவில்லை. இப்போதாவது வந்திருக்கிறதே. காலம் கடந்து வந்திருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சிறையில் இருக்கும் சசிகலாவை அமைச்சர்கள் சென்று சந்திக்கிறார்கள். கைதிகளை அரசு தான் பராமரிக்கும், ஆனால் கைதிகள் அரசை பரமரிக்கிறார்கள் என விமர்சித்தார் ஸ்டாலின்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்