முயற்சிகள் மூலம் சாதனை பிறக்கும்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (20:51 IST)
வருடங்கள் மாறினாலும் சில காரண காரணிகள் நம்மை அந்த வருடத்தின் பிணைப்பில் வைத்திருக்கும். காலங்கள் கடந்தாலும், வருடங்கள் மாறினாலும் இவை அனைத்தும் மாற்றத்திற்கான துவக்கம்தான்.... அதுவும் நிலையான தொடர்ச்சியான மாற்றத்திற்கான துவக்கம். புதிய ஆண்டு பிறக்கும் முன்னர், எண்ணங்கள் எண்ணிக்கைகள் மாறினாலும், இவை அனைத்தையும் நமது எதிர்காலத்திற்காக திரும்பி பார்க்க வேண்டிய கட்டாயமானதாகும்.



உலகளவில் அதிக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க மக்களின் ஜன தொகையில் பலருக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் பதவியேற்றது பிடிக்காமல் இருந்தது. ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பில்லயனர் ஒருவர் அதிபராவது அமெரிக்காவின் வளர்ச்சியை பின்நோக்கி கொண்டுசெல்லும் எனவும், டிரம்ப் குறுகிய எண்ணங்கள் உடையவர் என்பதால் முன்னாள் அதிபர் ஒபாமாவின் நலதிட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவார் என்றும் நினைத்தனர்.

இந்த காரணங்கள் இருந்தாலும் அவர்தான் அமெரிக்காவின் அதிபர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவை அனைத்தையும் விட வெள்ளை மாளிகையில் அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உலகின் அழிவை பெரிய அளவில் பிரதிபளிக்கும். சமீபத்தில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாதது. அதே போல், இணைய சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டுவரும் அவரது முடிவும் எதிர்ப்பை சம்பாதித்தது. 2018 ஆம் ஆண்டிலும் இத்தகைய மாற்றங்கள் கூர்ந்து கவனிக்கப்படும்.

மறுபுறம், சீனாவில் ஆதிக்கமிகுந்த மனிதராக உருவெடுத்த Xi Jinping, முன்னாள் தலைவர் Mao -ஐ விட சிறந்து விளங்கினார். இவரது ஆதிக்கம் இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் இந்தியா - அமெரிக்கா மத்தியில் சற்று சுமூகமான உறவை ஏற்படுத்தியது. அதேபோல் சீன - பாகிஸ்தான் உறவு கவலைக்கிடமானது நாம் அறிந்த ஒன்று. இதை தவிர்த்து, ரோஹிங்கியா இனப்படுகொலை, பிட்காயின், பனாமா பேப்பர்ஸ், ஐரோப்பாவில் பொருளாதார எழுச்சி, இந்திய வம்சாவளியின் மகன் Leo varadkar அயர்லாந்தின் இளம் பிரதமரானது அனைத்தும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் தாக்கம் விரைவில் மறையும் என நினைத்துகொண்டிருந்த நிலையில், அடுத்து ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் குண்டு வந்து விழுந்தது. ஆனாலும், இவை அனைத்தும் பல மறுபரீசலைனைகளுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மே 1 ஆம் தேதி விஐபி வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ரெட் சைரன் அகற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தலாக்கை தடை செய்ய சட்டத்தை இயற்றுவதற்காக அரசாங்கத்தை கண்டித்தது. இதன் முடிவில், மக்களவையில் இதன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது ஒரு சட்டமாக மாறினால், ஆண் ஆதிக்கம் கொண்ட சமுதாயத்தின் பிடியில் இருந்து முஸ்லீம் பெண்கள் பெரும்பாலானோர் விடுவிக்கப்படுவர்.

இந்த ஆண்டு முழுவதும் இது போல் பல சர்ச்சைகளை கடந்து வந்தாலும், GSLV mark 3-யின் வெற்றி போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியையும் தந்தது. 2018 ஆம் ஆண்டினை நம்பிக்கையோடு துவங்குவோம். பகைமை மற்றும் பழிவாங்கள் போன்ற உணர்வுகளை அகற்றுவோம். சமூக இணக்கத்தின் கனவுகள் நிறைவேறவும், 2018 ஆம் ஆண்டு முடிந்து அதனை திரும்பி பார்க்கும் போது வண்ணமையமான நினைவுகள் மலரட்டும். 2018 பாதையில் இருள் மற்றும் விரக்தியின் தடயம் இல்லாமல் இருக்கட்டும்.  

இவை அனைத்தும் மந்திரவாதியின் மந்திரகோள் கொண்டு நடத்தி முடிக்கப்படும் காரியம் அல்ல நமது உழைப்பால் மட்டுமே நடைபெறும். உழைப்பும், ஒற்றுமையும்தான் 2018 ஆம் ஆண்டு என அழைக்கப்படட்டும். முழு நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்