ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி - ராஜேந்திர பாலாஜி மீது சந்தேகம்

வியாழன், 30 டிசம்பர் 2021 (10:27 IST)
தற்போது மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. 

 
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.
 
நேற்று மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மோசடியில் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியது.
 
இந்நிலையில் தற்போது மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. ஆம், மதுரை ஆவினில் 2019 - 2020 ஆம் ஆண்டும் ரூ.30 கோடிக்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி மோசடி செய்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்