மியான்மாரில் பவுத்த பயங்கரவாதம் - ஒரு அலசல்

செவ்வாய், 2 ஜூலை 2013 (17:31 IST)
FILE
ஜூலை 1ஆம் தேதி டைம் இதழில் மியான்மாரை முன்வைத்து "பவுத்த பயங்கரவாதத்தின் முகம்' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளிவந்தது.

மியான்மார் பவுத்த பிட்சு ஏ.விராது என்பவர் முஸ்லிம்களுக்கு எதிராக 969 பவுத்த தேசியவாத இயக்கங்களை வழி நடத்தி வருகிறார். மியான்மரில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களையும் அவர்களது வர்த்தகங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்று அவர் வெளிப்படையாக பேசியும் பிரச்சாரம் செய்தும் வருகிறார். 'அமைதியாக இருக்க இது நேரமல்ல' என்று பவுத்தர்களை இஸ்லாத்துக்கு எதிராக துவேஷத்தை கிளப்பி வருகிறார் பிட்சு விராது.

தன்னை பர்மாவின் பின் லேடன் என்றே அவர் அழைக்க விருப்பப்படுகிறார். 2001ஆம் ஆண்டு 969 இயக்கத்தை அவர் அமைக்கிறார். இவரது கொள்கைகள் நேரடியாக ஹிட்லரின் நாஜியத்தை ஒத்ததாக உள்ளது. அதற்கு குறைந்தது அல்ல என்றே கூறலாம்.

முஸ்லிம் என்ற எந்த ஒன்றும் தன் நாட்டில் இருக்கக்கூடாது என்ற அளவில் அவரது துவேஷம் செயல்பட்டு வருகிறது. இவருக்கு மியான்மார் அரசு, ராணுவம், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவரது துவேஷப் பேச்சு தாலிபான்கள் பாமியன் சிலைகளை உடைத்து எறிந்ததற்குப் பிறகு பிரபலமடையத் தொடங்கின. இதன் பிறகே மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பெருகியது. பவுத்த பிட்சுக்களே நேரடியாக வன்முறையில் இறங்கினர்.
FILE

இஸ்லாமிய மக்களின் புனித இடமான மசூதிகள் சூரையாடப்பட்டன. முஸ்லிம்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 2003 வரை இந்த அட்டூழியங்கள் நடந்து வந்தது. ராணுவம் அவரை பிறகு கைது செய்து 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

FILE
இதே நிறவெறியனான பவுத்த பிட்சுவை கடந்த ஆண்டு மியான்மார் அரசு விடுதலை செய்தது. இப்போது இவர் தற்போது பவுத்த மடம் ஒன்றின் தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே-அக்டோபரில் அராகன் மாநிலத்தில் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டதில் பவுத்த பிட்சுக்களின் நேரடி தாக்கம் அதிகம். பிட்சுக்களே நேரடியாக வன்முறையில் இறங்கியதைப் பார்க்க முடிந்தது என்று டைம் இதழின் இந்தக் கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது. ராகின் என்ற மாநிலத்தில் மட்டும் பவுத்த வன்முறைக்கு ஏகப்பட்ட முஸ்லிம்கள் மரணமடைந்தனர். சுமார் 1,40,000 முஸ்லிம்கள் வீடிழந்துள்ளனர்.
FILE

ஒரே ஒரு வசிப்பித்தில் மட்டும் பவுத்தர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த வன்முறைக் கும்பல்.

இந்த முஸ்லிம்களுக்கு எதிரான பவுத்த வன்முறை மற்ற மாகாணங்களுக்கும் மெல்ல பரவியது. இந்த ஆண்டின் மார்ச் மாதம் கூட கடும் வன்முறையில் பவுத்த பிட்சுக்கள் அங்கு ஈடுபட்டனர். பவுத்த பிட்சு ஒருவர் கையில் பயங்கர கத்தியை வைத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் பெண்ணைப் பிடித்துக் கொண்டு சென்றார். என்னைத் தொடர்ந்தால் இவளை தீர்த்து விடுவேன் என்று போலீசையும் மிரட்டியுள்ளது.

மார்ச் 21ஆம் தேதி போலீஸ் கண் முன்னாலேயே பல முஸ்லிம்களை கொன்றுள்ளனர் பவுத்த பிட்சுக்கள். 'முஸ்லும்களை ஒழிப்போம்' என்று சுவர்களில் கூட எழுதப்பட்டிருந்ததை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் போட்டோ பிடித்துப் போட்டது.

குஜாத்தில் நடந்தது போலவும் இலங்கையில் நடப்பது போலவும் அரசும் இந்த சக்திகளுடன் கூட்டிணைந்துள்ளது என்பதுதான் இதில் பயங்கர உண்மையாகும்.

FILE
முஸ்லிம்களை படுகொலை செய்வது மியான்மார் அரசினுடைய திட்டம் என்றே பலர் எழுதி வருகின்றனர். தெய்ன் செய்ன் என்ற நாட்டின் அதிபர் முதல் நோபல் பரிசு வென்ற சூ கியி வரை இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சூ கியீ முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறையை ஒரு இடத்திலும் கண்டிக்கவில்லை. இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு! என்னக் காலக்கொடுமை?

இந்த நிலையில் பவுத்த பிட்சு விராது ஒரு தேசிய ஹீரோவாகவே மதிக்கப்படுகிறார்.

இந்தியர்களும் மேற்கத்தியர்களும் பவுத்தம் பற்றிய மிகவும் ரொமான்டிக்கான பார்வை வைத்திருக்கிறோம். பவுத்தம் மட்டுமல்ல எந்த ஒரு மதமும் வெகுஜன அரசியலாக, அரசியல் நிறுவனங்களாக மாறும்போது பொறுக்கித்தனம் ரவுடித் தனம் என்று ஆரம்பித்து கடைசியில் பாசிச கொலைவெறி சக்திகளாக உருவெடுத்துதான் ஆகும். இது வரலாற்றின் கட்டாயமாகும். அதனை ஒடுக்குவதும் வரலாற்றின் கடடாயம்தான்

தற்போதைய மேற்குவங்கமும் இப்போதைய வங்கதேசமும் ஒன்றாக இருந்தபோது முஸ்லிம் ஆட்சி இந்தியாவில் நடைபெற்றபோதே பவுத்த பிட்சுக்கள் பயங்கரத்தை விதைத்துள்ளனர் என்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜி.இ.ஹார்வி தெரிவித்துள்ளார். இந்துக்களையும் முஸ்லிம்களையும் அப்போதெ கொடூரமாக பவுத்தர்கள் அழித்தனர் என்று அவர் தனது நூலில் கூறிப்பிட்டுள்ளார் என்று டைம் இதழ் கவர் ஸ்டோரி ஆசிரியர் தெரிவிக்கிறார்.

இலங்கையில் இன்று....

இந்துக்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷ பேச்சை கிளப்பிவருபவர்களை சாந்தம் செய்ய இலங்கை அரசு டைம் இதழை தற்போது இந்தக் கட்டுரைக்காக தடை செய்துள்ளனர்.
FILE

உலகெங்கும் சகிப்புத் தன்மை இல்லாத மதம் என்றால் அது இஸ்லாம்தான் என்ற பொய் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. சகிப்புத் தன்மை என்பது எந்த ஒரு சமயம் சம்பந்தப்பட்டதுமல்ல. அறிவுக்குட்பட்டு தனிமனிதன் சிந்தித்து எடுக்கும் முடிவு தீர்மானம்.

இந்த இடத்தில்தான் காந்தியை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. அவர் கூறினார், குறிப்பாக இந்துக்களுக்குக் கூறினார். பிரிவினைவாத இந்து முஸ்லிம் கலவரத்தின் போது காந்தி கூறினார்: நாம் (இந்துக்கள்) சகிப்புத் தன்மையுடன் இருப்பது மட்டும் போதாது, சாதித்ததாகாது, நாம் யாரை சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்று நினைத்து வன்முறையைப் பிரயோகிக்கிறோமோ அவர்களிடத்தில் சகிப்புத் தன்மை இருப்பதாக நாம் கற்பனையாவது செய்து கொண்டு வன்முறைகளைக் கைவிடவேண்டும் என்றார்.

மியான்மர் பவுத்தர்களை பற்றி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அங்கு போலீஸ் பணியாற்றிய ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் ஆர்வெல் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடும்போது, ஆங்கிலேயர்களை நோக்கி எச்சில் துப்பியும், அவர்கள் முகத்திலேயே எச்சில் துப்பியும் தங்களது வன்முறையக் காட்டியவர்கள் என்று குறிப்ப்ட்டுள்ளார்.

நாம் அவசரப்பட்டு ஆங்கிலேயர்களை அப்படி செய்யவெண்டியதுதான் என்று கூறமுற்படக்கூடாது. அந்த மனோபாவம் என்ன என்பது மட்டும்தான் நாம் பார்க்கவேண்டியது.

வன்முறை மனித இயல்பு, கொலை செய்வதும் மனித இயல்பு, அல்லது வக்ர இயல்பு. அதுபோன்ற துர்குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்துவதுதான் மத நிறுவனங்களின் பணி. ஆனால் அதிகாரம் என்ற ஒன்று வரலாற்றில் அனைத்தையும் புரட்டி போட்டுவிடுகிறது. அனைத்தையும் தலைகீழாக மாற்றி விடுகிறது.

அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசவேண்டியவர்களே மதத் தலைவர்கள்தான் ஆனால் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் அதிகார இச்சையை ஒவ்வொருவர் இடத்திலும் உருவாக்கி செயலாற்றிவருகிறது. பாசிசம் என்பது என்ன? சர்வவல்லமை படைத்த சூப்பர் மேன், "கிடைத்தற்கரிய பெரியோன்"
என்றெல்லாம் பண்பாட்டில் நாம் தனிமனிதனை Ego Ideal -ஆக லட்சியவாதம் செய்து வழிபடுகிறோம். இதுதான் சுயம்/பிற என்ற இருமையை உருவாக்குகிறது. துவேஷங்களை கற்பிக்கிறது.

ஏதோ விராது என்ற ஒருவன் மட்டுமே அப்படி நாம் அப்படியல்ல என்று மன ரீதியாக சிரமப்பரிகாரம் செய்து கொள்வது தவறு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர்கள், ஸ்டாலின்கள், மோடிக்கள், விராதுக்கள் உள்ளனர்.

அதற்கான புற அமைப்புகள் தோன்றுவதற்கு இதுதான் காரணம். காரல் மார்க்ஸ் கூறுவதை இங்கு மறுகூற்றாக்கம் செய்து பார்ப்போம்: அவர் கூறினார்: மனிதன் வரலாற்றை உருவாக்குகிறான் பின்பு அந்த வரலாறே அவனை சிறைக்குள் தள்ளுகிறது என்றார்.

அதேதான் இங்கும் புறசூழல்கள், அமைப்புகளை உருவாக்குபவன் மனிதன்தான் ஆனால் சிந்திக்காது அவன் தெரிந்தோ தெரியாமலோ காரணமாகும் புறச்சூழலுக்கு பிறகு தான் பலவேளைகளில் சிந்திக்காமல் சில வேளைகளில் சிந்தித்தே அடிமையாகிறான்!

வெப்துனியாவைப் படிக்கவும்