மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டுமாம் - அண்ணா ஹசாரேயின் புது காமெடி!

வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (12:53 IST)
FILE
தேர்தல் நெருங்க நெருங்க இந்த மனிதர் இன்னும் என்னவெல்லாம் அவுத்து விடுவார் என்பதை நினைத்தால் பெரும் பீதியாகவே உள்ளது.

ஊழல் எதிர்ப்பாளரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

அன்னா ஹசாரே தனது 17 அம்ச கொள்கை பட்டியல் குறித்து மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாபானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், கிராம சமூக மையம் பொருளாதார முன்னேற்றம், தொழிற்கல்வி மேம்பாடு மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வருதல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

FILE
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் முகுல்ராய் அன்னா ஹசாரேக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள், நிலம் கையகப்படுத்துவதில் ஒளிமறைவு இன்மை, மைனாரிட்டி மக்களுக்கான திட்டங்கள் போன்றவற்றை மம்தாபானர்ஜி ஏற்கனவே செயல்படுத்தி வருகிறார்.

நீங்கள் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள். உங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. எங்கள் தலைவர் மம்தா பானர்ஜியும் உங்களின் கொள்கைகளின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே கொள்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட நிலையில் அதன் தலைவரும் மே.வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும் என அன்னா ஹசாரே விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை காட்டிலும் மம்தா பானர்ஜி அதிக இடங்களை பெறுவார். பிரதமர் பதவி வேட்பாளர்களுக்கான மாநில கட்சி தலைவர்களில் முலாயம் சிங் யாதவ் மற்றும் நிதிஷ்குமாரை விட மம்தாபானர்ஜி சிறந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்