பைத்தியக்காரத் தனமான உற்சாகம்! 12 வயது சிறுவன் பரிதாப பலி!

வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (12:27 IST)
FILE
அமெரிக்காவில்தான் இதுபோன்ற பைத்தியக்காரர்களின் நடமாட்டம் அதிகம். ஆங்காங்கே துப்பாக்கிகள் காய்கறிபோல் விற்கப்படுவடும் இளைஞர்களும் சிறுவர்கள், சிறுமிகளும் துப்பாக்கிக் கலாச்சாரத்தில் ஊறிப்போயுள்ளனர் அங்கு. அந்த பண்பாடு இங்கும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

எதற்கெடுத்தாலும் பட்டாசு, வெடி என்ற கலாச்சாரம் இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல கல்யாணத்திற்கும் பட்டாசு, சாவுக்கும் பட்டாசு! அப்படியாக்த்தான் இந்தியன் வாழ்ந்து வருகிறான்.

இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது:

உத்தரபிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தின் தின்கர்பூர் கிராமத்தில் நேற்றிரவு ஒரு செல்வந்தர் வீட்டு திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற உறவினர் ஒருவர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியை உருவி, வானத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

விழா மகிழ்ச்சியில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அபிஷேக்(12) என்ற சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவன் சில நிமிடங்களில் துடிதுடித்து உயிரிழந்தான். இச்சம்பவத்துக்கு காரணமான நபர் திருமண கும்பலுக்கிடையில் நழுவி தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஷாப்பூர் போலீசார் அவரை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.

உற்சாகத்திற்கு ஒரு எல்லையில்லையா என்பதை இந்த சம்பவம் கேள்வியாக எழுப்பியுள்ளது. நெருப்புடன் விளையாடுவது, உயிருடன் விளையாடுவது என்று இந்தியனின் 'வாழ்க்கைத் தரம்' நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது.

துப்பாக்கி வாங்கி நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொண்டிருந்தால்? அதனை ஒருநாள் பயன்படுத்தவேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணம் மனதின் அடியில் கணன்று கொண்டுதான் இருக்கும்.

கொலைகார ஆயுதத்திற்கு கல்யாணம் போன்ற சுப தினத்தில் என்ன வேலை.

வெப்துனியாவைப் படிக்கவும்