காற்றாலை மின்சார உற்பத்திக்கான வாய்ப்பு இந்தியாவில் 30 மடங்கு அதிகமுள்ளது

வியாழன், 22 மார்ச் 2012 (12:41 IST)
FILE
மின்சாரத் தட்டுப்பாடைக் காரணம் காட்டி அணு உலைகளை ஆங்காங்கே திறக்க வெகுஜன கருத்துற்பத்தியை பெருக்கி வரும் மத்திய அரசும் அதற்குச் சாதகமான கார்ப்பரேட் ஊடகங்களும் அணு உலை இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டு விடும் என்ற மாயையை கட்டமைத்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் காற்றாலை மின்சார சக்திக்கான வாய்ப்பு இந்தியாவில் எதிர்பார்த்தைவிட 30 மடங்கு அதிகம் என்கிறார்.

தற்போதைய அரசு உத்தேசங்களின் படி 102 கிகாவாட் மின்சாரம் மட்டுமே காற்றாலை மூலம் தயாரிக முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை விட அதிகம் காற்றாலை மின்சாரம் நமக்கு பயன் கொடுக்கும் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

"இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவமும் என்னவெனில் காற்றாலை எரிசக்தி என்பதுதான் அதிக செலவில்லாமல் மின்சாரம் பெற இந்தியா போன்ற நாடுகளில் ஒரே வழி. 15 கிகாவாட் நிர்மாணங்கள் தவிர இதன் வாய்ப்புகள் மேலும் வளர்ந்தபடியே உள்ளன. என்று ஆய்வை மேற்கொண்ட பெர்கிலி லேப் விஞ்ஞானி அமோல் பாட்கே தெரிவித்தார்.

மேலும் காற்றாலை மின்சாரத்திற்கான இடுசெலவு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு குறைவானதே. மேலும் இது சுற்றுச்சூழலையும் அவ்வளவாக பாதிப்பதில்லை.

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 5 மாநிலங்களில் காற்றாலை எரிசக்தி குவிமையம் பெற்றுள்ளது.

அரசு தற்போது உத்தேசமாக கூறியுள்ள காற்றாலை மூலம் 102கிகாவாட் தயாரிக்க முடியும் என்றாலும், அது முழுமையாக மேம்படுத்தப்படும், போதிலும் கணிக்கப்பட்ட மின்சார எதிர்கால தேவையில் 8%-மட்டுமே பூர்த்தி செய்யும். அதாவது 2022ஆம் ஆண்டு நாட்டின் மின்சாரத்தேவையில் காற்றாலை மின்சாரம் 8% மட்டுமே வழங்கும்.

ஆனால் பெர்கிலி லேப் ஆய்வின் படி காற்றாடிக் கம்பம் 80மீ உயரத்தில் இருந்தால் 2006 கிகாவாட் மின்சாரமும், 120 மீ உயரம் நிறுவப்பட்டால் 3,121 கிகாவாட் வரை மின் உற்பத்திச் சாத்தியம் என்றும் இந்த ஆய்வு நெற்றியில் அடித்தாற்போல் கூறியுள்ளது.

தங்களுடைய இந்தக் கண்டுபிடிப்புகளை இந்தியாவின் நம்பத் தகுந்த அரசு வட்டாரங்களில் கூறியுள்ளதாகவும் உற்சாகமான பதில் கிடைத்துள்ளதாகவும் விஞ்ஞானி பாத்கே கூறியுள்ளார்.

புதிய மற்றும் மறுபுனர் எரிசக்தி அமைச்சகம் பெர்கிலி லேபுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அமெரிக்காவிலும், சீனாவிலும் காற்றாலை மின்சார உற்பத்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவிலும் இந்த எரிசக்தி வாய்ப்பின் ஆதாரங்களை பல மடங்கு அதிகரிக்க முடியும் என்று ஆய்வை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்றாலை கம்பங்களின் உயரத்தை அதிகப்படுத்தினால் அதிக மின் உற்பத்தி கிடைக்கிறது என்பது சீனாவிலும், அமெரிக்காவிலும் மேற்கொண்ட ஆய்வுகளின் படி தெரியவந்துள்ளது.

இன்று மலையளவு, கடலளவு அணு உலையில் மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி அயல்நாட்டு அரசுகளுக்கு பெரிய அளவு உதவி புரிந்து வரும் மன்மோகன் கும்பல் ஆட்சி, உண்மையில் நாட்டின் வளர்ச்சியில் அக்கரை கொண்டிருந்தால் இது போன்ற செலவு குறைவான ஆனால் அதிக உற்பத்தியை வழங்கும் எளிமையான வழிமுறைகளுக்குத் திரும்பட்டும்.

News Summary: The potential for on-shore wind energy deployment in India is considerably higher than the official estimates- around 20 times and up to 30 times greater than the present government estimate of 102 gigawatts, according to a new study led by an Indian origin scientist.

வெப்துனியாவைப் படிக்கவும்