இலவச கழிப்பிடத்தையு‌ம் ‌வி‌ட்டு‌வை‌ப்ப‌தி‌‌ல்லை!

வியாழன், 28 அக்டோபர் 2010 (17:41 IST)
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி ஆணையரகார்த்திகேயன் கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி மாநக‌ரி‌ன் பல்வேறபகுதிகளிலநடைபெற்றவருமமாநகராட்சி பணிகளஆய்வு செய்து கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது சிந்தாதிரிப்பேட்டை 82வதவார்டிலபூதப்பெருமாளகோயிலதெருவிலமாநகராட்சி இலவபொதுக்கழிப்பிடத்திலஅன்வரஎன்பவரபொதுமக்களிடமஇருந்தகட்டணமவசூலிப்பதகண்டறிந்தா‌ர். இதை‌த் தொட‌ர்‌‌ந்து அவ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நூ‌ற்று‌க்கு‌ம் அ‌திகமான இலவச க‌ழி‌ப்‌பிட‌ங்க‌ள் உ‌ள்ளன. இ‌ந்த க‌ழி‌ப்‌பிட‌ங்களை பொதும‌க்க‌ள் இலவசமாகவே பய‌ன்படு‌த்‌‌‌தி‌க்கொ‌ள்ள மாநகரா‌ட்‌சி அனும‌தி‌த்து‌ள்ளது. ஆனா‌ல் இ‌ந்த க‌ழி‌ப்‌பிட‌ங்களை ‌சில‌ர் ஆ‌க்‌கிர‌மி‌‌த்து பொதும‌க்க‌ளிட‌‌ம் பண‌த்தை கறந்து வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை ‌வி‌‌ல்‌லிவா‌க்க‌‌த்‌தி‌ல் உ‌ள்ள சுடுகா‌டு அருகே மாநகரா‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் இலவச பொது க‌ழி‌ப்‌பிட‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ந்த க‌ழி‌ப்‌பிட‌த்தை ஒருவ‌ர் ஆ‌க்‌‌கிர‌மி‌த்து அத‌ன் அரு‌கி‌ல் ‌சி‌றிய குடிசை போ‌ட்டு வா‌ழ்‌ந்து வ‌ந்ததோடு, வசூ‌ல் வே‌ட்டை‌யிலு‌ம் இற‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ர். மல‌‌ம் க‌ழி‌க்க மூ‌ன்று ரூபா‌ய், ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்க இர‌ண்டு ரூபா‌ய் எ‌ன்று வசூ‌‌ல் செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ர். இதனை மாநகரா‌ட்‌சியு‌‌ம் க‌ண்டுகொ‌ள்ளாம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டது. பல நா‌ட்களாக வசூ‌ல் வே‌ட்டையை தொட‌‌ர்‌ந்த அ‌‌ந்த நபரு‌க்கு இடி ‌விழு‌ந்தா‌‌ர்போ‌ல் பாடி அருகே மே‌ம்பால‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டதா‌ல் அ‌ந்த‌க் க‌ழி‌ப்‌பிட‌‌ம் தரைம‌ட்டமா‌க்க‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல் ம‌யிலா‌ப்பூ‌‌ர் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் அருகே இரு‌க்கு‌ம் இலவச பொது‌க்க‌‌ழி‌ப்‌பிட‌‌த்‌தி‌ல் ஒருவ‌ர் மேஜையை போ‌ட்டு வசூ‌ல் வே‌ட்டை தொட‌ர்‌ந்து நட‌த்‌தி வரு‌கிறா‌ர். இத‌ன் மூல‌ம் தனது வா‌‌ழ்‌க்கையை க‌ழி‌க்கு‌ம் அ‌ந்த நப‌ர் லோக்கல் அர‌சிய‌ல் வா‌திக‌ளி‌ன் துணையோடு இதனை செ‌‌‌ய்‌கிறா‌ர் எ‌ன்று பொதும‌க்க‌ள் கூறு‌கி‌‌ன்றன‌ர்.

இ‌வ‌ர்க‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளிலு‌‌ம் அத‌ன் ‌நி‌ர்வாகமே வசூ‌ல் வே‌ட்டை‌யி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கிறது. இர‌யி‌‌ல்க‌ளி‌‌ல் கொடு‌க்க‌ப்படு‌ம் உண‌வி‌ல் இரு‌ந்து க‌‌‌‌‌ழி‌ப்‌பிட‌‌ம் வரை பொதும‌க்க‌ளிட‌ம் பண‌த்தை சுர‌ண்டி வரு‌கிறது. பண‌த்தை கொடு‌த்து க‌‌ழிவறை செ‌ன்றா‌‌ல் சு‌த்தமாக இரு‌க்குமா எ‌ன்றா‌ல் ‌‌கிடையாது. வேறு வ‌ழி‌யி‌ல்லாம‌ல் மூ‌க்கை பொ‌த்‌தி‌க்கொ‌ண்டு ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌த்து‌‌க் கொ‌ண்டுதா‌ன் ம‌க்க‌ள் செ‌ல்‌கிறா‌ர்க‌‌ள்.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட க‌‌‌‌‌ழி‌‌‌ப்‌பிட‌ங்க‌ளா‌ல் பொதும‌க்க‌ள் பல நோ‌ய்களு‌க்கு ஆளாக நே‌ரிடு‌கிறது. இலவச க‌ழி‌ப்‌பிட‌ம் எ‌ன்று மாநகரா‌ட்‌சி க‌ட்டி‌க் கொடு‌‌க்‌கிறது. அதோடு ச‌ரி, அதனை பராம‌ரி‌க்க‌ ஆ‌ட்களை ‌நிய‌மி‌‌ப்பது‌ம் இ‌‌ல்லை. ‌சிறு‌நீ‌ர், மல‌ம் க‌ழி‌ப்பவ‌ர்க‌ளும் சு‌த்தமாக வை‌த்து‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்க‌ள் ‌கிடையாது. அ‌ப்படியே அசு‌த்த‌த்தை ஏ‌ற்படு‌த்‌திவி‌ட்டு செ‌ல்‌கிறா‌ர்க‌ள். ‌சில க‌‌ழி‌ப்‌பிட‌‌ங்க‌‌ளி‌ல் ‌விபசார‌மு‌ம் கொடி க‌ட்டி பற‌க்‌கிறது.

இலவச க‌ழி‌ப்‌பிட‌த்தை பராம‌ரி‌க்க ஆ‌ட்களை ‌நிய‌மி‌‌ப்பதோடு அவ‌ர்க‌ளி‌ன் செய‌ல்பாடு எ‌ப்படி இரு‌க்‌கிறது எ‌ன்று மாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ள் ஆ‌ய்வு செ‌ய்தா‌ல் ‌ம‌ட்டுமே இவ‌ற்றை ஒ‌ழி‌க்க முடியு‌ம். க‌ழி‌ப்‌பிட‌ம் க‌ட்டுவதுதா‌ன் எ‌ங்க‌ள் வேலை.. பராம‌ரி‌ப்பது, சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்வதல்ல எங்கள் வேலை... எ‌ன்று மாநகரா‌ட்‌சி இரு‌ந்து ‌விட‌க்கூடாது எ‌ன்பது‌தா‌ன் பொதும‌க்க‌ளி‌ன் ஆதங்கம்!

வெப்துனியாவைப் படிக்கவும்